Monday, 16 January 2023

கல் தொட்டி

 

வேலூர் கோட்டை ஏ. எஸ். ஐ. அலுவலகத்தில் இருக்கும் கல்தொட்டி. 
இது போன்ற கல்தொட்டிகள் கோயில்களில் பயன்பாட்டில் இருந்துள்ளன.

வேலூர் கோட்டையில் ஜலகண்டேசுவரர் கோயிலில்.
அபிஷேக நீர் சேகரிக்க.

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயிலில் உள்ள கல் தொட்டி.
மேலும் கீழும் வேலைப்பாடுகள் கொண்டது.
இது போன்ற தொட்டிகள் அபிஷேகத்திற்கான நீர், விளக்கேற்றுவதற்கான எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி வைக்க பயன்பட்டுள்ளன. சில கல் தொட்டிகளில் 'நெய் தொட்டி', 'விளக்கு எண்ணெய் தொட்டி' என்று பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கல் தொட்டியில் நெய் தொட்டி என்று எழுதப்பட்டுள்ளது. 

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயிலில் உள்ள மற்றொரு கல் தொட்டி.
அழகிய கோலாட்டச் சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது.

தஞ்சை கல் தொட்டி. இதன் கொள்ளளவு குறிக்கப்பட்டுள்ளது
(படம், செய்தி நன்றி: கல்வெட்டு வகுப்பு IT 2022 வாட்ஸ் அப் குழு)



கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...