300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்
600 - 900 - பல்லவர், பாண்டியர்
850 - 1150 - சோழர்
1100 - 1350 - பிற்கால பாண்டியர்
1300 - 1565 - விஜயநகரம்
1565 - 1800 - நாயக்கர்கள், நகரத்தார்
மகேந்திரவர்மன் ஆட்சி காலத்தில் இறுதி ஆண்டுகளிலும் நரசிம்மரின் ஆட்சி காலத்தில் தொடக்கத்திலும் கடுமையான பஞ்சம் நிலவியதை பக்தி இலக்கியங்களிலும் யோவான் சுவாங் பயண குறிப்புகள் மூலமும் தெரிய வருகிறது இதனால் புதிய கோயில் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்ஃபட்டது பின்னர் பரமேஸ்வர வர்மன் காலத்தில் மீண்டும் கோயில் கட்டிடக்கலை சற்று புத்துயிர் பெற்றது. கூறம் என்ற ஊரில் இவரால் எடுக்கப்பட்டதாக கருதப்படும் வித்யா வினீத பல்லவ பரமேஸ்வர க்ருஹம் என்ற கற்றளியின் அதிட்டானப் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இதே ஏழாம் நூற்றாண்டு எழுத்த அமைதியோடு சிவகங்கை மாவட்டம் திருக்கோளக்குடி குன்றின் அடிவாரத்தில் ஒரு கற்றளியின் அதிட்டான பகுதியும் காணக் கிடைக்கிறது.
ராஜசிம்மன் என்ற அத்தியந்த காமனின் காலத்தில் தமிழக கோயில் கட்டடக்கலை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. ஒரு கல் தளி, கட்டுமான கோயில்கள் என .
பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில் ராஜசிம்மரின் முதல் அங்க ஆலய அமைப்பு கொண்ட கோயில்
அங்காலயம், பரிவார ஆலயம், சாந்தாரம், ஓவியங்கள் என பல்வகை முன்னோடி முயற்சிகள் நிகழ்த்தப்பட்ட கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயில்
திருக்கட்டளை மகாதேவர் ஆலயம் புதுக்கோட்டை சோழர் காலத்தில் பரிவார ஆலயங்கள் பெற்ற முதல் கற்றளி
சோழர் காலத்தில் கற்றளிகள் அதிவேக வளர்ச்சி கண்டன
கொடும்பாளூர் வேளிர்கள், முத்தரையர்கள், பிற்கால பாண்டிய மன்னர்கள் சிறப்பான பங்காளிப்பை செய்துள்ளனர்.
ஏழாம் நூற்றாண்டு முதல் சுமார் ஆறு நூற்றாண்டுகள் கோயில் கட்டடக்கலைத் துறையின் பொற்காலமாக திகழ்ந்தது எனில் மிகையல்ல. இந்த காலகட்டத்தில் ஆகமங்களும் எழுதப்பட்டன
பிறகு விஜயநகர நாயக்கர் ஆட்சி காலத்தில் பெரும் கோயில் வளாகங்கள் உருவாயின
No comments:
Post a Comment