Tuesday, 18 July 2023

உபகிரீவம்

 ஒரு தளம் முடிந்த பிறகு அடுத்த தளத்திற்குப் பதிலாக (தளக் கணக்கீடு அளவை விடக் குறைவாக) அமைக்கும் சுவர் உப கிரீவம்.இதில் அமையும் சிகரங்கள் கீழ்த்தளத்திற்கு உரியவை .

உப கிரீவம் விமானத்தின் ஆகிருதியை அதிகப் படுத்தி காட்டுவதற்காக மட்டுமல்ல. கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானின் அடிப்படை அளவிற்குத் தகுந்த விமானம் எழுப்ப படும் போதும் உபகிரீவம் பயன்படும்( சுயம்பு லிங்க ரூபங்களின் அளவிற்குத் தக்கவாறு அல்லது ஸ்தானக விஷ்ணு மூலபேரமூர்த்திக்குத் தக்கவாறு) 

உபகிரீவம்
(படம்: திரு ராஜவேலு)

மேற்படி விமானம் முதல் பார்வையில் இரு தள விமானம் போலத் தோற்றமளித்தாலும் ஆதி தளத்திற்கு மேல் உள்ள சுவரின் உயரம் ஒப்புநோக்க மிகக் குறைவானதாக உள்ளதைக் காண்க. இது உப கிரீவம். ஹாரத்தின் சாலை ஆதி தளத்தின் பத்ர நீட்சியின் மீதும், கர்ணக் கூடுகள் உப கிரீவத்தின் மூலைகளிலும் அமைந்துள்ளன. ஆனாலும் ,இரண்டுமே ஆதி தளத்திற்கே உரியவை. ஆகவே இது ஏக தள விமானம்தான். ஸ்ரீவிசாலம்.

படம்: டாக்டர் சுரேந்திரன்

கருத்து: டாக்டர் சுரேந்திரன், கோயில் கட்டடக் கலை ஆர்வலர்





கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...