Friday, 9 September 2022

நெற்குதிர் (கொட்டாரம்)

சில கோயில் வளாகங்களில் கோயில் நிலங்களில் இருந்து பெறப்படும் நெல்லை சேமித்து வைக்க நெற்குதிர்கள் உள்ளன. இவை கொட்டாரம் என அழைக்கப்படுகின்றன. 

திருவரங்கம் ரங்கனாதர் கோயில், திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில், ஆதி திருவரங்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) ரங்கனாதர் கோயில், கும்பகோணம் அருகே உள்ள பாபனாசம் திருப்பாலைவனம் பாலைவனநாதர் கோயில் முதலிய கோயில்களில் நெற்குதிர்கள் அமைந்துள்ளன.
  • இவை செங்கல், சுதையால் கட்டப்பட்டவை.
  • இவை சுமார் 400 - 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை.
  • இவை திராவிடக் கட்டடக்கலை மரபில் கட்டப்பட்டுள்ளன.

ஆதி திருவரங்கம்

வெளித் திருச்சுற்றில் வடகிழக்கில் ஒரு நெற்குதிர் அமைந்துள்ளது. இரு தள சுத்த வேசர ஆறங்க கட்டுமானமாக அமைந்திருப்பது சிறப்பு.

தானியக் கிடங்கு, ஆதி திருவரங்கம் 

தானியக் கிடங்கு, ஆதி திருவரங்கம்
கூரை உட்புறத் தோற்றம் 

திருவரங்கம்

30 அடி உயரமும் 20 அடி விட்டமும் கொண்ட 5 பெரும் நெற்குதிர்கள் திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. இந்த வட்டவடிவ நெற்குதிர்களில் 1,500 டன் தானியத்தை சேமிக்க முடியும் எனப்படுகிறது.

திருவரங்கம் ரங்கனாதர் கோயில் நெற்குதிர்கள் - புனரமைப்புக்கு முன்

புனரமைப்புக்குப் பின்

திருப்பாலைவனம்

திருப்பாலைவனம் நெற்குதிர்


துணை


No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...