Friday, 9 September 2022

கோயில்களில் ஆமை

ஆமை வலிய பொருள்களை அசைவின்றி தாங்கும் வல்லமை கொண்டதென்பது தொன்மம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டபோது, வாசுகியால் இழுபட்டு மேரு மலை இங்கும் அங்கும் அலைய, அதை உறுதியாய் நிலை நிறுத்த திருமால் ஆமை (கூர்ம) அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. திராவிட கோயிற் கட்டடக் கலையில் ஆமைமீது அமைந்த கட்டடங்கள் முதலியன உண்டு.
  • ஆமை மண்டபம்
  • ஆமை பீடம்
  • ஆமை விளக்கு
  • யாக கலச வேதிகைகளில் ஆமை
  • ஆமை இருக்கை மீது சிவன்
  • பிரதிமேஷிடிகையில் ஆமை

ஆமை மண்டபம்

ஆமை மண்டபம், மாதொருபாகன் ஆலயம், திருச்செங்கோடு
ஆமை மீது நாகங்கள், யானைகள், பூதங்கள் தாங்குவது போன்று அமைந்தது

ஆமை மேடை

ஆமை மேடை
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலய கல்யாண மண்டபம்

இது ஆமையின் முதுகின் மேல் உள்ளதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆமையின் முகம் கிழக்கு நோக்கியுள்ளது. நான்கு மூலைகளிலும் கால்கள்.

மேடையின் பக்கங்களில் எண்திசைகளுக்குரிய 8 காவலர்கள் (தங்கள் வாகனங்களுடன்), 8 யானைகள், 8 நாகங்களுடன், சிங்கங்கள் எட்டும், ரிஷிகள் எழுவரும் மேடையைத் தாங்கி நிற்பது போன்று சித்தரிக்கப் பட்டுள்ளனர்.

இந்த படத்தில் தெரியும் கிழக்கு முகத்தில் நடுவில் ஐராவதத்துடன் இந்திரன், இரு யானைகள், இருநாகங்கள், தெற்கே ஆட்டுடன் இருதலை அக்னி, வடக்கே மாட்டுடன் ஈசானன், இரு சிம்மங்கள் உள்ளன. நடுவில் ஆமையின் தலையும், மூலைகளில் இரு கால்களும் தெரிகின்றன.

இது போன்ற ஆமை மேடைகள் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் கல்யாண மண்டபங்கள், திருக்கழுக்குன்றம் தாழக் கோயில், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் ஆகிய இடங்களிலும் உள்ளன.

ஆமை விளக்கு

ஆமை விளக்கு
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்

வேதிகைகளில் ஆமை 

ஆகம முறைப்படி செய்யப்படும் யாக வழிபாடுகளில்  கலசங்களை வைக்க அமைக்கப் அடும் மேடைகள் வேதிகைகள் எனப்படும். அவை பலவகைப்படும். அவற்றில் பலவற்றில் அடியில் ஆதாரமாக அமைவது ஆமை இருக்கைதான் (கூர்மாசனம்)

யாக வழிபாட்டின் முதன்மை இறைவனுக்காக அமைக்கப்படும் வேதிகை பஞ்சாசனம் எனப்படும். இது கீழிருந்து மேலாக கூர்மாசனம், அனந்தாசனம்,  சிம்மாசனம், யோகாசனம், விமலாசனம், பத்மாசனம், என்னும் ஐவகை இருக்கை நிலைகள் கொண்டது. இவ்வைந்துக்கும் ஆதாரமாக அடியில் இருப்பது கூர்மாசனம்

பஞ்சாசன வேதிகை
(படம் நன்றி: ஈழநல்லூர் சிவாகமவிசாரத முத்தமிழ் குருமணி கலைமாமணி Dr S S குருஜி; ஆகம சித்திரங்கள் - பாகம் 3)



பஞ்சாசனத்தின் மீது அமர்ந்த சிவ உருவங்கள்

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் 15 கிமீ தூரத்தில் உள்ள கோவிந்தவாடியில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் தட்சிணாமூர்த்தியே பிரதான தெய்வம். அவர் வழக்கமான கல்லால மரமின்றி பஞ்சாசன பீடத்தின் மீது அமர்ந்திருப்பது தனிச் சிறப்பு. இவ்வாறு சென்னை கச்சாலீஸ்வரர் கோயிலில் லிங்கம் பஞ்சாசனம் மீது அமைந்துள்ளது. கச்சபம் - ஆமை


சென்னை கபாலீஸ்வரருக்கு அளிக்கப்பட்ட பஞ்சாசன வேதிகை
(https://twitter.com/trramesh/status/668353106040590336?lang=eu)

பிரதிமேஷ்டிகை

கருவறையில் உள்ள இறைஉருவம் மேலே கலசத்தின் மூலம் இறைசக்தியை பெறுவது போல பூமியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கான அமைப்பு பிரதிமேஷ்டிகை. அதில் ஒரு உறுப்பு ரஜத கூர்மம் (ரஜத - வெள்ளி; கூர்மம் - ஆமை)





No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...