பிரதிமேஷ்டிகா விதி
கருவறையில் உள்ள இறைஉருவம் மேலே கலசத்தின் மூலம் இறைசக்தியை பெறுவது போல பூமியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கான அமைப்பு பிரதிமேஷ்டிகை.
ஆதார சிலா - சிலா - கல். ஆதாரம் - அடிப்படை. அடியில் அகரம், இகரம், உகரம் கற்களை அமைத்து மத்தியில் திசைகளுக்குரிய நவரத்தினங்களை அமைக்க வேண்டும். விமானம் எதனால் கட்டப்படுகிறதோ, (கருங்கல், செங்கல், மரம், முதலியன) அதே பொருளால் ஆன கல்லே ஆதார சிலாவாக வைக்கப்படும்.
நிதி கும்பம் - காசுகள் முதலியவற்றைக் கொண்ட குடம். கும்பம் = குடம். இத்தகைய குடங்கள் அகழ்வாய்வுகளில் பொ.ஆ. முதல் நூற்றாண்டு முதலே கிடைக்கின்றன.
சிலா பத்மம் - கல்லாலான பத்மம்
ரஜத கூர்மா - ஆமை போன்ற அமைப்பு
கனக குமாரா - தங்கத்தால் ஆனது
யோக நாளம் - கீழிருந்து சிலை வரைசெல்லும் மரத்திலான சக்தியைக் கடத்தும் தண்டு.
அதிஷ்டான சிலா - பாத பீடத்தின் கீழ் உள்ள அதிஷ்டானக் கல்
பாத பீடம் - சிலையைத் தாங்கும் பீடம். பத்ம அல்லது பத்ர பீடம்.
நன்றிக்கடன்
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
No comments:
Post a Comment