Saturday, 10 September 2022

வேதிகை

வேதிகை என்றால் திண்ணை என்று பொருள். 'வேதி' என்றும் அழைக்கப்படும். சுவருக்கு அழகு சேர்ப்பதால் இதற்கு 'பாத பூசனம்' என்றும் பெயர்

வேதி கீழ்கண்ட இடங்களில் அமைகிறது.
  1. அதிஷ்டானத்தின் மேல் - பித்தியின் அடிப்பாகத்தில்
  2. இரண்டு முதலான மேல் தலங்களில் - கீழ் பிரஸ்தரத்திற்கு மேல், பித்தியின் அடிப்பகுதியில்
  3. தூண்களின் அடிப்பகுதியில் 
  4. ஹாரத்தின் கர்ண, சாலை, பஞ்சர கூடங்களின் கீழ்ப் பகுதியில் அவற்றின் அதிஷ்டானம் போல
  5. கிரீவத்தின் அடிப்பகுதியில்

வேதி உறுப்புகள்


வேதிகையும் அதன் உறுப்புகளும்
கூழமந்தல்

மேற்படி படத்தில் கண்டுள்ளபடி சுவரில் உள்ள கோட்டங்கள் வேதிகைகளை இடைவெட்டி அமையலாம்.

வகைகள்

வேதிகள் மூன்று வகைகளில் அமையலாம்:


வேதியின் தோற்றமும் வளர்ச்சியும்
  • பல்லவர் காலத்தில் வேதி ஆங்காங்கே துண்டு துண்டாக பித்தியில் இருந்தன.
  • இருக்குவேளிர், முத்தரையர் கோயில்களில் வேதி கிடையாது.
மூவர் கொயில் ( இருக்கு வேளிர்) வேதி இல்லை

  • சோழர் காலத்தில் வேதியின் அமைப்பு தரப்படுத்தப்பட்டு தொடர்ந்து பித்தியில் பயன்பாட்டுக்கு வந்தது.
"வேதிகை மேல் கம்பு ஒரு கூறுடன் அரைக்கூறு கூட்டிக் கொண்ட அளவை இரண்டு கூறு செய்து மேலே ஒரு கூறில் கைவல பத்மமும் கீழே ஒரு கூறில் கைவலமும் அமைத்து மற்ற யாவையும், சாதாரண வேதிகையைப் போல் செய்தால்' சித்ராங்க வேதிகை' என்று பெயர். (ம.க.க. 1 ப82)

பிற்காலத்தில் சில இடங்களில் வேதிகை, கபோதம் பிரதிவரி ஆகியவைகூட அமையப் பெற்று பெரிதாகியது.

பாதபந்த அதிஷ்டானத்தின் மீது கபோதம் உடைய வேதிகை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம்

பிரதிபந்த அதிஷ்டானத்தின் மீது
கபோதமும் பிரதிவரியும் கூடிய பெரிய வேதிகை
திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் கோயில்

துணை

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

















No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...