விமான வகைகள் - கட்டுமானப் பொருட்கள்
- ஏக / சுத்த விமானம் - ஒரே பொருளால் கட்டப்பட்டது (கல் அல்லது செங்கல்)
- மிஸ்ர விமானம் - இரு பொருட்களால் கட்டப்பட்டது (கல் மற்றும் செங்கல்)
- சங்கீர்ண விமானம் - இரண்டுக்கு மேற்பட்ட பொருட்களால் கட்டப்பட்டது (கல், செங்கல், மரம்)
இன்னொரு வகைப்பாடு
- சஞ்சிதம் - கல் அல்லது செங்கல் (ஆண்)
- அசஞ்சிதம் - முழுவதும் மரம் (பெண்)
- நபும்சகம் - கல்காரம் (கல் அல்லது செங்கல்), மேலே மரம் (அலி)
சுசீந்தரதில் ஒரு விமானம், நாகேசுவரன் கோயிலில் ஒரு சபா முழுக்க மரத்தால் ஆனவை. (அசஞ்சிதம்)
கால்புறவாய் அளவுகளின் அடிப்படையில் விமான வகைகள்
விமானத்தின் அகலமானம் (மானம் = அளவு) கால்புறவாய் எனப்படும். விமானங்களின் கால்புறவாய், உன்னதம் (உயரம்), தலங்களின் எண்ணிக்கை இவற்றின் அடிப்படையில் விமானங்களை காஸ்யபம் கீழ் கண்ட வகைகளக பிரிக்கிறது.
- ஷூத்ர -
- அல்ப -
- மத்ய
- மகா
- ஜாதி மானம் - (நல்ல பிரமானம்)
- சந்த மானம் - (நல்ல தோற்றம், )
- விகல்ப மானம் - (பலவித கற்பனை, கலப்பு வகை)
- ஆபாச மானம் - (பிரகாசம்)
ஜாதி விமானம்
ஜாதி விமானம் நல்ல அகலம் உடைய பிரம்மாண்டமான விமானம். குறைந்தது நான்கு தலங்கள் உடையது. ஜாதி விமானத்தில் அதிகபட்சம் எத்தனை தலங்களை அமைக்கமுடியும் என்பதை ஆகமங்கள் நிர்ணயித்துள்ளன.
- தீப்தம் - 4
- ரௌரவம் - 11
- காஸ்யபம், அஜிதம் - 12
- காமிகம் - 16
ஜாதி விமானங்கள் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளன.
- தஞ்சை பெரிய கோயில் விமானம் - 14 தலங்கள்
- கங்கை கொண்ட சோழபுரம் கோயில் விமானம் - 9
- திருபுவனம் கோயில் விமானம் - 7
- தாராசுரம் கோயில் விமானம் - 5
- திருவதிகை கோயில் விமானம் - 5
- திருப்புன்னவாசல் - 5
- காஞ்சி கைலாசநாதர் கோயில் விமானம் - 4
| ஜாதி விமானம் - திருப்புன்னவாசல் |
| அல்ப விமானம் ஏனாதி, புதுக்கோட்டை அருகில் |
ஆபாச விமானம்
ஆபாசம் என்றால் வேறுபட்டது என்று பொருள். தளங்களின் அளவுகளில் வேறுபாடு உடைய விமான வகை. காஞ்சீபுரம் முக்தீசுவரர் கோயில், கண்ணனூர் கோயில், போன்றவை ஆபாச விமான வகையைச் சேர்ந்தவை.
| ஆபாச விமானம் முதல் தலத்தில் இரு சாலைப் பத்திகள், முக சாலை இல்லை இரண்டாம் தலத்தில் ஓரே சாலைப் பத்தியாக மாறுகிறது. இந்த மாற்றமே ஆபாசம். |
சந்த விமானம்
இது 'Golden Ratio' எனப்படும் 1.618 ஐ அடிப்படையாகக் கொண்டது. எனவே, நல்ல தோற்றத்தை உடையது என்ற பொருள் கொண்ட 'சந்த' எனும் பெயர் கொண்டது.
விகல்ப விமானம்
இது அகலத்தோடு ஒப்பிடுகையில் உயரம் அதிகம் உடையது.
சந்தப் பிரமாண வகைப்பாடு
இது கால்புறவாய் அகலம், விமானத்தின் உயரம் இவற்றுக்கு இடையே ஆன விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு.
சாந்திகம் 7 : 13
பௌஷ்டிகம் 6 : 11
ஜெயதம் 5 : 9
அற்புதம் 1 : 2
சர்வகாமியகம் 1 : 2-1/4
இந்த உயர அளவுகளில் ஒரு முழம் கூட்டியோ குறைத்தோ கட்டலாம்.
சாந்திகம்
சாலாகார, சபாகார வகை விமானங்கள் பெரும்பாலும் சாந்திக வகையில் வரும்.
| சாந்திக விமானம் |
பௌஷ்டிகம்
| பௌஷ்டிக விமானம் பனங்குடி, சித்தன்னவாசல் அருகில் |
ஜெயதம்
| ஜெயதம் |
| அற்புதம் - திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் |
சார்வகாமிகம்
| சார்வகாமிகம் அர்ச்சுனன் தபசு - மகாபலிபுரம் |
தோற்றத்தின் அடிப்படையில் விமான வகைப்பாடு
- ஸ்தானகம் - நின்ற நிலை - உயரத்தின் அடிப்படையில்
- ஆசனம் - அமர்ந்த நிலை - அகலத்தின் அடிப்படையில்
- சயனம் - கிடந்த நிலை - சுற்றளவின் அடிப்படையில்
பெருமாள் கோயில்களில் இந்த அடிப்படையில் விமானங்கள் அமைவதைக் காணலாம்.
| ஆசனம் திருவள்ளூர் ஜகன்னாதப் பெருமாள் கோயில் |
| ஸ்தானகம் (உபரித்தலம் மூலம் உயரம் கூட்டப்பட்டுள்ளதைக் காண்க) |
| சயனம் - சாலாகார விமானம் |
சுவர் எண்ணிக்கை அடிப்படையில் விமான வகைகள்
- சாந்தார விமானம் - இரட்டை சுவரும், இடையில் சுற்றுப் பாதையும் (ஆலிந்தம்) கொண்டது
- நிராந்தர விமானம் - ஒற்றைச் சுவர் கொண்டது.
சாந்தார வகை விமானத்தில் வெளிச்சுவரும் விமானத்தின் எடையைத் தாங்குவதில் பங்கு வகித்தால் மேலே உள்ள ஹாரம் 'அர்பிதம்' ஆக (ஒட்டி) இருக்கும். சாந்தார வகை விமானத்தின் வெளிச்சுவர் விமானத்தின் மேல் கட்டுமானத்திற்கு வெளியில் இருந்தால் மேலே உள்ள ஹாரம் 'அனர்பிதம்' ஆக (ஒட்டாமல்) இருக்கும்.
உள்கூட்டின் கட்டுமானத்தின் அடிப்படையில் விமான வகைகள்
உள்கூட்டின் அடிப்படையில் விமானம் இருவகைப்படும்.
- கதலிகாகர்ணம்
- நாபிச்சந்தம்
கதலிகா கர்ணம்
கதலிகா கர்ணம் என்பது தரைத் தல சுவர்மேல் அமைந்துள்ள விமானத்தின் உள்கூட்டைக் குறிக்கும். கதலி என்பது வாழை. வாழைக்குலையைப் போன்ற தோற்றம் உடையது. கற்களை அடுக்கும்போது உள் நீட்சியாக அடுக்குவது. உதாரணமாக, கல்லின் மூன்றில் ஒரு பங்கு கீழ் கல்லை விட உள் நீட்சியாக இருக்குமாறு கட்டுவது.
| கதலிகா கர்ணம் |
நாபிச்சந்தம்
இது கோபுரங்களின் உள்கூடு அமையும் விதம். கல் வரிசைகளை ஏறக்குறைய இணையாக வைத்து கட்டுவது.
| தாஜ் மகால் (ஆறு அங்க கட்டுமானம்; கதலிகா கர்ணம், நாபிச்சந்தம் இரண்டும் உண்டு) |
பிரம்மாந்திரக் கல்
விமானத்தின் சிகரத்தின் மேற்பகுதி கல்பலகை வைத்து மூடப்படும். இந்த தலைக் கல்பலகைக்கு 'பிரம்மாந்திரக் கல்' என்று பெயர். இது ஒன்றாகவோ இனைப்புகளால் ஆனவையாகவோ இருக்கலாம். கீழே கருவரையின் நடுவில் உள்ள பிரம்மஸ்தானம் என்னும் மூலவரின் இடத்திற்கு நேர் மேலே அமைந்து விண்ணில் இருந்து இறை ஆற்றலைக் கடத்துமாறு அமைந்துள்ளதால் இப்பெயர்.
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
சுரேந்திரன் Dr; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021 (படங்கள், செய்திகள்)
ஐயா அந்த தூங்கானை மாட விமானம் திருச்சி அல்ல அது.. திருத்தனி...
ReplyDelete