விமான பேதம்
கட்டடக் கலை நூல்களான மானசாரம், மயமதம், காஸ்யபம் போன்றவை குறிப்பிட்ட விமான வடிவம், தோற்றம், அலங்காரம் கொண்ட விமானங்களுக்கு தனிப் பெயர்களைத் தருகின்றன. இவை விமான பேதங்கள் எனப்படும். 1 தலம் முதல் 16 தலம் வரை விமான பேதங்கள் சொல்லப்பட்டுள்ளன.
காஸ்யபம் 14 வகை விமான பேதங்களைச் சொல்கிறது.
- ஸ்ரீவிஜயம்
- ஸ்ரீபோகம்
- ஸ்ரீபத்ரம்
- ஸ்ரீவிசாலம்
- ஸ்வஸ்திபந்தம்
- ஸ்ரீகரம்
- ஸ்ரீகண்டம்
- ஹஸ்திபிருஷ்டம்
- ஸ்கந்த காந்தம்
- விருத்த கேசரம்
- ராஜகேசரம்
- மத்யபத்ரம்
- கலயாண சுந்தரம்
- கோசலை
1. ஸ்ரீவிஜயம்
மயமதம் - கலப்பு விருத்த வேசர விமானம் (கிரீவம், சிகரம், ஸ்தூபி வட்டம்)
காஸ்யபம்
- கலப்பு விருத்த வேசர விமானம் (கிரீவம், சிகரம், ஸ்தூபி வட்டம்)
- பத்ரத்துடன் (நீட்சியுடன்) கூடிய நான்கு மகா நாசிகள்,
- பிரஸ்தரத்தில் அல்ப நாசிகள்
- கிரீவலங்காரம், ஸ்ரீபத்ரம் என்றும் கூட பெயர் உண்டு.
| ஸ்ரீவிஜயம் |
கர்ண கூடங்களைக் கொண்ட விமானங்கள் மூன்று: ஸ்ரீபோகம், ஸ்ரீபத்ரம், ஸ்ரீவிசாலம்
2. ஸ்ரீபோகம்
மயமதம் - கிரீவம், சிகரம் வட்டம் + கர்ண கூடங்கள்
காஸ்யபம்
- நான்கு மூலைகளில் கர்ண கூடங்கள்
- மகா நாசி சம அல்லது முக பத்ரம்
- அகாரையில் மிகச் சிறிய நாசிகள்
- நாகர கிரீவம், விரும்பிய சிகரம்
| ஸ்ரீபோகம் - பிரம்மதேசம் |
3. ஸ்ரீபத்ரம்
மயமதத்தில் இல்லை. காஸ்யபத்தில்
- பித்தியில் தூண்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
- சம பத்ரம் அல்லது முக பத்ரம்
| ஸ்ரீபத்ரம் - தேவூர் மாடக்கோயில் |
4. ஸ்ரீவிசாலம்
மயமதம் - விருத்த கிரீவம், சிகரம் + கர்ண கூடங்கள் + மத்ய பத்ரம்
காஸ்யபம் - விருத்த கிரீவம், சிகரம் + கர்ண கூடங்கள் + மைய சாலை முக பத்ரம்
| ஸ்ரீ விசாலம் |
5. ஹஸ்தி பிருஷ்டம் / கஜபிருஷ்டம்
மயமதம் - த்வையஸ்ர சிகரம்
காஸ்யபம்
- இரட்டை வட்ட சிகரம்
- நான்கு மகா நாசி, 8 அல்ப நாசி
| கஜபிருஷ்டம் |
6. மனோகரம்
உப கிரீவத்துடன் கூடிய ஆயத்தவிருத்த வேசர விமானம்.
| மனோகரம் |
7. கோசலை
காஸ்யபம்
- சாலாகார விமானம்
- முன்னும் பின்னும் பத்ர நாசிகள்
- இரு பார்சுவங்களிலும் லலாட நாசிகள்
| கோசலை - தில்லை காளி கோயில் |
8. விருத்த கேசரம்
காஸ்யபம்
- விருத்த கண்டம், சிகரம்
- 1,2,3 தெண்ட அகல மகா நாசி, கோஷ்டம்
- விதிக்குளில் பத்ர நாசிகள்
| விருத்த கேசரம் - சீர்காழி தோணியப்பர் கோயில் (மிகப் பெரிய மகா நாசி) |
9. ஸ்ரீகரம்
மயமதம் - சதுரஸ்ரம்
காஸ்யபம்
- வேதிகை, சிகரம் - சதுரம்
- சிகரத்தின்நான்கு பக்கங்களில் நான்கு மகா நாசிகள்
- பிரஸ்தரத்தில் 8, 10 அல்ப நாசிகள்
| ஸ்ரீகரம் கீரதாங்கி புதுக்கோட்டை |
10. ஸ்ரீகண்டம்
காஸ்யபம்
- கண்டம், சிகரம் - சதுரம்
- சிகரத்தில் நான்கு மகா நாசிகள், எட்டு அல்ப நாசிகள்
| ஸ்ரீகண்டம் |
11. ஸ்கந்த காந்தம்
மயமதம் - சிகரம் - ஷடஸ்ரம்
காஸ்யபம்
- வேதிகை, கண்டம், சிகரம் - 6 பட்டை
- ஒவ்வொரு பட்டையின் நடுவிலும் மகா நாசி (6 மகா நாசி)
| ஸ்கந்த காந்தம் |
12. ஸ்வஸ்திபந்தம்
மயமதம் - அஷ்டஸ்ரம்
காஸ்யபம்
- வேதிகை, கண்டம், சிகரம் 8 பட்டை
- 4 திசைகளில் பத்ர நாசிகள்
- மற்ற பக்ககங்களிலும், பிரஸ்தரங்களிலும் 40 அல்ப நாசிகள்
| ஸ்வஸ்திபந்தம் கற்கடேசுவரர் கோயில் |
13. கல்யாண சுந்தரம்
காஸ்யபம்
- கண்டம், சிகரம் - ஆயத விருத்தம்
- 4 மகா நாசி
- ஒவ்வொரு தூணிலும் அல்ப நாசி
| கல்யாண சுந்தரம் திருவையாறு அய்யாரப்பன் கோயில் (ஆயத நாகர கீழ்ப் பகுதியின் மீது 4 கர்ண கூடங்கள், விருத்த சிகரம். குக்குடாண்ட விமானம்) |
சுத்த ஆயத வேசர விமானங்களாகிய காஞ்சிபுரம் ஜுவரஹரேசுவரர் கோயில், அழகர் கோயில் விமானங்கள் இவ்வகை. அவை குக்குடாந்த வடிவம் என்றும் அழைக்கப்படும். (குக்குடம் = கோழி).
14. மத்ய பத்ரம்
- கால்புறவாய் அகலத்தை 7, 8 பாகம் செய்து, 2 அல்லது 3 பாகம் மத்ய பத்ரம் அகலம்.
- மகா நாசியின் நீளம் அகலத்திற்கு சமம்.
| மத்ய பத்ரம் - எசாலம் |
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
சுரேந்திரன் Dr; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
No comments:
Post a Comment