Friday, 9 September 2022

துவிதல விமான பேதங்கள்

துவிதல விமான பேதங்கள்

காஸ்யப சிற்ப நூலில் இரு தல விமனங்களுக்கு 16 பேதங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை
  1. ஸ்வஸ்திகம்
  2. ஸ்வஸ்தி பத்ரம்
  3. விபுல சுந்தரம் 
  4. ஸ்ரீகரம்
  5. கைலாசம்
  6. ருத்ரகாந்தம்
  7. விஷ்ணுகாந்தம்
  8. பர்வதம்
  9. ஸ்வஸ்தி பெந்தம்
  10. கல்யாண சுந்தரம்
  11. மங்களம்
  12. காந்தாரம்
  13. ஹஸ்தி பிருஷ்டம்
  14. மனோகரம்
  15. விருத்த கிரஹம்
  16. குபேரகாந்தம்

1. ஸ்வஸ்திகம்
  • உபானம் முதல் ஸ்தூபி வரை சதுரஸ்ரம் (சதுர நாகரம்)
  • 4 கர்ண கூடம், 4 சாலை
  • 48 அல்ப நாசி, 8 பஞ்சரம்
  • சிகரத்தில் 4 மகா நாசி
  • நாற்புறங்களும் அலங்காரமாகவும், வேதிகை முதல் பற்பல சித்திரங்கள் பொறிக்கப்பட்டிருப்பது
ஸ்வஸ்திகம் - பாண்டியர் கலை

2. ஸ்வஸ்திபத்ரம் 

ஸ்வஸ்திக விமான சிகரத்தில் பார்சுவங்களில் (பக்கங்களில்) பக்கத்திற்கு இரண்டாக 8 அல்ப நாசிகள் உடையது

3. விபுல சுந்தரம்

ஸ்வஸ்திக விமானத்தில் கர்ண கூடம், பஞ்சரம், சாலை இவைகள் சமமாக இல்லாமல் சாலை மட்டும் உயரமாக ஏறு சாலையாக அமையும் விமானம்.

விபுல சுந்தரம் - கொடும்பாளூர் மூவர் கோயில்

4. ஸ்ரீகரம்
  • மூலைகளில் கர்ண கூடங்கள்
  • நடுவில் கோஷ்டம், பஞ்சரம் 
  • கிரீவம், சிகரம், ஸ்தூபி கொண்டது.

5. கைலாசம்

கர்ண கூடங்கள் உயர்ந்தும், சாலைகள் இறங்கு சாலைகளாகத் தாழ்ந்தும், தனித்த பஞ்சரங்களுடனான விமானம்.

கைலாசம் - பல்லவர் கலை

6. ருத்ரகாந்தம்
  • 4 கர்ண கூடங்கள்
  • 48 அல்ப நாசிகள்
  • வேதிகை 8 பட்டம்
  • கண்டம் , சிகரம் - விருத்தம்
  • 8 மகா நாசிகள்
  • 4 திசைகளிலும் பத்ரம்
  • கூடம் கோட்டம் சம உயரம், அந்தர பிரஸ்தரம்
  • அகாரையில் ஒறைக்கால் அல்லது இரட்டைக் கால் பஞ்சரம்

7. விஷ்ணுகாந்தம்
  • ருத்ர காந்த விமானம் போல கூடம் கோட்டம்
  • கண்டம், சிகரம் 8 பட்டை
  • தேர்கள் செய்யத் தகுந்தது.
விஷ்ணுகாந்தம் - பிறவாதீசுவரம், காஞ்சிபுரம்

8. பர்வதம் / சார்வதேசிகம்
  • 8 கர்ண கூடங்கள், 4 சாலைகள்  - ஆறு அங்கம், அந்தர பித்தி கொண்டவை
  • பல அல்ப நாசிகள்
  • வேதிகை, கண்டம், சிகரம் - விருத்தம்

பர்வதம் / சார்வதேசிகம்
கூழமந்தல்

9. ஸ்வஸ்திபந்தம்
  • 4 கர்ண கூடங்கள்
  • 68 அல்ப நாசிகள்
  • சதுர சிகரம் அதில் 4 கோட்டங்கள்
ஸ்வஸ்திபந்தம்

10. கல்யாணசுந்தரம்
  • 4 கர்ண கூடங்கள், 4 சாலைகள், அகாரையில் பஞ்சரம்
  • 72 அல்ப நாசிகள்
  • அந்தர பிரஸ்தரம்
முதலிய சகல அணிகளுடன் அமையும் விமானம்.

11. மங்களம்
  • வேதிகை, கண்டம், சிகரம் ஆயத நாகரம்
  • 3 ஸ்தூபிகள்
சுமங்களம்

12. காந்தாரம்

ஆயத நாகரத்தை ஆயத விருத்தமாக அமைத்த விமானம்.

காந்தாரம்
வேப்பம்பட்டு - ராஷ்டிரகூடர் கலை

13. ஹஸ்தி பிருஷ்ட விமானம்
  • அகலத்திற்கு அரை பங்கு கூட்டி நீளம்
  • அரை வட்ட விமானம்
  • முகத்திலே நேத்ர சாலை

14. மனோகரம்
  • சதுரஸ்ரம் / ஆயதஸ்ரம் / விருத்தம் / விருத்தாயதம் (சதுரம் / நீள் சதுரம் / வட்டம் / நீள் வட்டம்)
  • தூண்கள் உள் புறமாகவும், வெளிப்புறமாகவும் அமைந்தவை
  • அதற்கேற்ப கர்ண கூடம் பஞ்சரம், கோட்டம் ஆகியவற்றை சம உயரம், சம சூத்திரத்தில் அமைந்தவை

15. விருத்த ஹிருக விமானம்
  • அதிஷ்டானம் சதுரம் 
  • கருவறையிலிருந்து ஸ்தூபி வரை கர்ண கூடம், சாலைகளுடன் எல்லா அணிகளுடன் அமையும் விமானம்.

16. கௌபேர காந்த விமானம்
  • முதல் தலம் சதுரம் அல்லது நீள் சதுரம்
  • கண்டம், சிகரம் 6 பட்டை
கௌபேர காந்தம்
திருபுவனை அம்மன் சந்நிதி

1விபுல சுந்தரம்சதுரஸ்ர நாகரம் + ஏறு சாலை
2கைலாசம்சதுரஸ்ர நாகரம் + இறங்கு சாலை
3ஸ்வஸ்திகம்சதுரஸ்ர நாகரம் 48 அல்ப நாசி
4ஸ்வஸ்தி பத்ரம்சதுரஸ்ர நாகரம் + பக்கத்துக்கு 2 அல்ப நாசி
5ஸ்வஸ்தி பெந்தம்சதுரஸ்ர நாகரம்
6மங்களம்ஆயத்த நாகரம்
7காந்தாரம்ஆயத்த நாகரத்தை ஆயத்த வேசரமாக அமைத்த விமானம்.
8ருத்ரகாந்தம்கலப்பு விருத்தம் 4 கர்ண கூடம்
9பர்வதம்கலப்பு விருத்தம் 8 கர்ண கூடம்
10ஹஸ்தி பிருஷ்டம்கஜபிருஷ்டம்
11விஷ்ணுகாந்தம்கலப்பு 8 பட்டை
12குபேரகாந்தம்ஆறுபட்டை
13ஸ்ரீகரம்
14கல்யாண சுந்தரம்72 அல்ப நாசி
15மனோகரம்
16விருத்த கிரஹம்

நன்றிக்கடன்

மரபுக் கட்டடக்கலை (இரன் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

சுரேந்திரன் Dr; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021


No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...