தோரணம் என்பது இரு தூண்கள் மேல் குறுக்காக அமைந்த அணி செய்யப்பட்ட அமைப்பு.
உறுப்புகள்
தோரணம் மூன்று உறுப்புகளை உடையது. அவை நாசிகளுக்கானவையே ஆகும்.
- காடம் நடுவில் உள்ள குழிந்த பகுதி - இதில் சிற்பங்கள் அமையும்.
- தோரணப்பட்டி - அணி செய்யப்பட்ட லாடப் பகுதி.
- சிகை - தலைப் பகுதி
வகைகள் (அமைவிடம் சார்ந்து)
அமைவிடம் சார்ந்து தோரணங்கள் மூன்று வகைப்படும்.
- பித்தி தோரணம் / குட்ய தோரணம்
- துவார தோரணம் / வாயில் தோரணம்
- ஸ்தம்ப தோரணம்
1. பித்தி தோரணம் (குட்ய தோரணம்)
பித்தியில் கோட்டங்களுக்கு மேல் அமைவது
கட்டடம் சாராது தனியாக அமைவது.
| தூண் தோரணம் (ஸ்தம்ப தோரணம்) முக்தேசுவரர் கோயில், புவனேஸ்வர் Soumendra Barik, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons |
வகைகள் (சிற்ப அலங்காரங்களைச் சார்ந்து)
அவற்றில் செய்யப்படும் சிற்ப அலங்காரங்களைச் சார்ந்து தோரணங்கள் மூன்று வகைப்படும்.
- பத்ர தோரணம்
- மகர தோரணம்
- சித்ர தோரணம்
1. பத்ர தோரணம்
பத்ரம் என்றால் இலை. பிறை நிலவு போல வளைவாக இலை, கொடிக்கருக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோரணம், இதில் மகரம் இருக்காது.
| பத்ர தோரணம் (நன்றி: இரா. ச. இராசவேல்) |
2. மகர தோரணம்
பக்கங்களிலும், உச்சியிலும் மகரத்தலைகள் கொண்டு இலை, கொடி, அலங்காரங்கள் உடைய தோரணம்.
| மகர தோரணம் (நன்றி: இரா. ச. இராசவேல்) |
3. சித்ர தோரணம்
மகர தோரணத்தில் கொடி, இலைகளுக்குப் பதிலாக பூதங்கள், வித்யாதரர்கள், வீரர்கள், யானை, வியாழம் முதலிய உருவங்கள் மகரத்தின் வாயில் இருந்து வெளிப்படுவது போல அமைத்து முத்து மாலை, பூ மாலை ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுவது.
| சித்ர தோரணம் (நன்றி: இரா. ச. இராசவேல்) |
தோரணத்தின் அமைப்பைக் கொண்டும் கட்டுமானத்தின் காலத்தைக் கணிக்கலாம்.
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I
Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)
No comments:
Post a Comment