Saturday, 10 September 2022

ஜாலகம்

'பலகணி' என்பது இதன் மற்ற பெயர்.

வகைகள்
  • கோநேத்திரம் (கவக்சா)
  • ஹஸ்தி நேத்திரம் (குஞ்சரக்சா)
  • நந்தியாவர்த்தம்
  • ருஜீகிரியம்
  • அப்ஜவர்த்தம்
  • புஷ்பகரணம்
  • சமகர்ணம்
  • வல்லி மண்டலம்
  • ஸ்வஸ்திகம்
  • வட்டம்

கோநேத்திரம்

பசுவின் கண் போன்ற அமைப்பு. 'கவக்சா' என்றும் பெயர்.

கோநேத்திரம் (கவக்சா)
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

2. ஹஸ்தி நேத்திரம் 

யானையின் (ஹஸ்தி = யானை) கண் போன்ற அமைப்பு. 'குஞ்சரக்சா' என்றும் பெயர். சதுரமான துளைகள் உடையது.

ஹஸ்திநேத்திரம் 
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

3. நந்தியாவர்த்தம் 

நந்தியாவட்ட மலர் போல வலம்புரியாக ஐந்து பிரிவுகளை உடைய துளைகளைக் கொண்டது. ஸ்வஸ்திகத்தின் எதிர் வளைவு அமைப்பு.

நந்தியாவர்த்தம் 
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

4. ருஜீகிரியம்

கயிறு திரித்தது போன்ற அமைப்பு உடையது. கயிறுகள் செங்கோணமாக அமைய வேண்டும்.

ருஜீகிரியம்
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

5. அப்ஜவர்த்தம் 

பலகணியின் உள் சட்டங்களில் தாமரைகளைக் (அப்ஜம்) கொண்டிருப்பது. 

அப்ஜவர்த்தம் 
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

அப்ஜவர்த்தம் நந்தியாவர்த்தம் போன்ற அமைப்பு கொண்டிருந்தால் புஷ்பகண்டம், சுகர்ணம் என்று பெயர்.

6. வல்லி மண்டலம் 

கொடிக் கருக்கு அமைப்பு.

(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்).


7. ஸ்வஸ்திகம் 

ஸ்வஸ்திகா
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

8. வட்டம்

இவ்வகையில் பல வகைகள் சிற்ப நூல்களில் கூறப்பட்டுள்ளன.

வட்டம்
(நன்றி: திருமதி சௌந்தரி ராஜ்குமார்)

துணை

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 

சங்கரநாராயணன்; சைவ ஆகமங்களில் கோயில் கட்டிடக் கலை
பகுதி 1: https://www.youtube.com/watch?v=9ot7btX4_hc&t=12s
பகுதி 2: https://www.youtube.com/watch?v=jtY9CkiGYvI
பகுதி 3: https://www.youtube.com/watch?v=xq4yGMkkb5I

Srinivasan. K.R; Temples of South India;NBT; 4th ed;1998 (reprint2017)






No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...