Saturday, 10 September 2022

சோபானம்

சோபானம் என்பது படிக்கட்டைக் குறிக்கும்.

பலகா - மேற்படி

சந்திர சிலா - கீழ்ப் படி. இது அரை வட்ட வடிவில் உள்ளதால் இப்பெயர். மயமதத்தில் இதற்கு 'அஸ்வ பாதம்' என்று பெயர்.

ஹஸ்தம் - படிகளின் இரு புறமும் இருக்கும் கைப்பிடிச் சுவர். (ஹஸ்தம் - கை)

சோபானம்
மாமண்டூர்

சோபானத்தின் அடிப்படை பல்லவர் குடைவரைகளிலேயே கிடைக்கிறது.

படிக்கட்டுகளின் பக்கங்களில் யானை, யாளி உருவங்கள் இடம் பெறும். இவை முறையே 'கஜ ஹஸ்தம்' அல்லது 'ஹஸ்தி ஹஸ்தம்', 'வியாழ ஹஸ்தம்' எனப்படும்.

யானை, யாளி இவற்றின் வாயில் இருந்து வெளியே வரும் துதிக்கைக்கு 'யஷ்டி' என்று பெயர். 'துதியாளி', 'ஹஸ்தியாளி' என்றும் அழைப்பர்.

சில படிகளை உடைய சோபானத்திற்கு 'திரிகண்ட சோபானம்' என்று பெயர். 

கைப்பிடிச் சுவரின் பக்கங்களில் சிற்பங்கள் அமையலாம்.

பக்ஷ சிலா

இரு பக்கங்களில் இருந்து அமையும் படிக்கட்டு. (பக்ஷி - பறவை; பறவையின் விரிந்த இறக்கையைப் போல உள்ளது.)

பக்ஷ சீலா
எண்ணாயிரம்

வகைகள்

அர்த்த கோமுத்ர - மையமின்றி குறுக்கும் நெடுக்குமாக அமைந்த படிகள். ராஜ கோபுரத்தில் மேலே செல்ல அமைக்கப்படும் மரப்படிகள் இவ்வகை.

சங்க மண்டலம் - மேலே செல்லச் செல்ல குறுகும் சுருள் வடிவப் படிக்கட்டு

வல்லி மண்டலம் - ஒரு தூணைச் சுற்றி அமைந்த சுருள் வடிவப் படிக்கட்டு. எனவே,மேலே போகப் போக குறுகாது. மரப்படிகள். 


துணை

சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021

மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்; 


No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...