வாயிலின் பகுதிகள் கீழ்வருமாறு:
| வாயில் (துவாரம்) |
கதவுகள்
கருவறைக்கு கதவுகள் கிடையாது. கதவுகள் இல்லாத வாயில் 'சுத்த துவாரம்' எனப்படும்.
மற்ற இடங்களில் கதவுகள் இருந்தால் இரட்டைக் கதவுகளாக இருக்கவேண்டும்.
புவங்கம்
வாயிலின் கீழ் கட்டை
பதங்கம்
மேல் உத்தரம்.
லலாட பட்டம்
பதங்கத்தின் மேல் இருக்கும் பட்டையான உறுப்பு. லலாடம் என்றால் நெற்றி. இதில் 'கஜலக்ஷ்மி', 'அஷ்ட மங்கலம்' போன்ற சின்னங்கள் அமையும்.
நிலைக் கால்
'ஸ்தம்ப யோகம்' என்றும் பெயர். வாயிலின் பக்கத்தில் உள்ள தூண்கள்.
இதன் கீழ்ப்பகுதி மூலையில் 'நாக பந்தம்' இடம் பெறும்.
கீழ்ப் பகுதியின் முன்புறத்தில் சங்க நிதி, பத்ம நிதி அல்லது கங்கை , யமுனை சில கோயில்கள்களில் இடம் பெறக்கூடும். இவை பிற்கால சோழர்கள் காலத்தில் இருந்து கிடைக்கின்றன. கங்கை, யமுனை பிற்கால கோபுரங்களில் இடம் பெறுகின்றன.
சகா
நிலைக்கால்களின் முன் பகுதியில் மேல் வரை இடம் பெறும் சிற்பங்களால் ஆன பத்திகள் 'சகா' எனப்படும். தமிழகத்தில் பொதுவாக ஒரு பத்திதான் (ஏக சகா) காணப்படும். வட இந்தியா, கர்நாடகத்தில் பல பத்திகள் அமைவது உண்டு. சகாவில் வல்லி எனும் கொடி, பத்மம் எனும் தாமரை, ரத்னங்கள், நாகம் ஆகியவை இடம் பெறலாம். முறையே வல்லி சகா, பத்ம சகா, ரத்தின சகா, நாக சகா என்று அழைக்கப்படும். தமிழகத்தில் பொதுவாக வல்லி சகா, பத்ம சகா தான் கிடைக்கின்றன.
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
No comments:
Post a Comment