கூட நாகர, விருத்த வேசர விமானங்களில் ஒரு ஸ்தூபியும், சாலை நாகர, விருத்தாயத, கஜபிருஷ்ட விமானங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தூபிகளும் அமையும்.
ஸ்தூபி உறுப்புகள்
ஸ்தூபியின் முக்கிய உறுப்புகள் கீழ்க்கண்டவை ஆகும்.
- பத்மம்
- குடம்
- பாலிகாநாளம்
- குட்மலம்
இவற்றின் இடையே கம்புகள், பத்மங்கள் ஆகிய சிற்றுறுப்புகளும் இருக்கும்.
| ஸ்தூபி (படம் உதவி: விக்கிபீடியா) |
ஸ்தூபியின் வடிவம் சிகரத்தின் வடிவத்தைப் போன்று இருக்க வேண்டும். அதாவது, சிகரம் நாகரம் என்றால், ஸ்தூபியும் நாகரம். ஆனால், நடைமுறையில் அனைத்து தற்கால ஸ்தூபிகளும் வட்டமாகவே உள்ளன. முழுதும் கற்களாலாலான பழைய விமானங்களில் கல்லாலான ஸ்தூபிகள் மட்டும் சிகரத்தின் வடிவைக் கொண்டுள்ளன.
ஸ்தூபியை பொன், வெள்ளி, தாமிரம், பித்தளை, கல், சாந்து ஆகிய பொருட்களைக் கொண்டு செய்யலாம்.
ஸ்தூபி தண்டு
ஸ்தூபியின் உள்ளே பொருத்தப்படும் மரத்தண்டு ஸ்தூபி தண்டு எனப்படும். இதை வைரம் பாய்ந்த கருங்காலி, புளியம், இலுப்பை, வன்னி ஆகிய மரங்களினால் செய்யலாம். இதன் வடிவம் லிங்கத்தைப் போல மேலே வட்டம், நடுவில் எண்பட்டை, கீழே சதுரமாக இருக்கும்.
துணை
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
No comments:
Post a Comment