மையம்
கோயிலின் மையமாக அமைவது முதன்மை இறையின் விமானம், அந்தராளம், அர்த்த மண்டபம், இடைநாழி, மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றின் தொகுதி ஆகும். அதைச் சுற்றி கோயிலின் திருச்சுற்றுகள் அமைகின்றன.
காண்க:
திருச்சுற்றுகளில் அமைந்துள்ளவை.
திசைகளுக்குரிய இறை மற்றும் அடியார் வடிவங்கள் குறிப்பாக முதல் திருச்சுற்றில் விமானம் மற்றும் அர்த்த மண்டபத்தின் தேவ கோட்டங்களிலும், இரண்டாம் திருச்சுற்றிலும். இவை தனிப் பதிவுகளாகவும், மற்ற பதிவுகளிலும் விளக்கப்பட்டுள்ளன.
- மற்ற தெய்வ சன்னிதிகள்
- மண்டபங்கள்
- கொடிமரம்
- பலிபீடம்
- இறையின் வாகனம்
- தல மரம்
- குளம்
- கிணறு
- திருச்சுற்று மதில்கள் மற்றும் கோபுரங்கள்
- மடப்பள்ளி
- நெற் குதிர்கள்
- வாகன, கருவூல அறைகள்
திருச்சுற்றுகளின் அமைப்பு
கருவறை மற்றும் அர்த்த / முக மண்டபத்தைச் சுற்றி அமைந்திருப்பது முதல் திருச்சுற்று.
முதல் திருச்சுற்று மற்றும் மகாமண்டபத்தைச் சுற்றி அமைந்திருப்பது இரண்டாம் திருச்சுற்று.
1. கருவறை 2. அந்தராளம் 3. அர்த்த / முக மண்டபம்
4. சாவாகாச அந்தராளம் (இடைநாழி) 5. மகா மண்டபம்
6. பலிபீடம், வாகனம் 7. அக்னி / துர்க்கை 8. 63 நாயன்மார்கள்
9. சப்த கன்னிகள் 10. விநாயகர் 11. முருகர்
12. ஜேஷ்டா தேவி / லக்ஷ்மி 13. சண்டேசர் 14. அம்மன்
15. பாஸ்கரன் / நவகிரகம்
16. முதல் திருச்சுற்று (அந்தர் மண்டலம்)
17. இரண்டாம் திருச்சுற்று (அந்தர் ஹாரை)
ஐந்து திருச்சுற்றுகள் வரை அமைந்திருக்கலாம். திருவண்ணாமலை அண்ணமலையார் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பேசுவரர் கோயில் ஆகியவை ஐந்து திருச்சுற்றுகள் பெற்றவை. திருவரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே ஏழு திருச்சுற்றுகள் பெற்ற கோயில். (பாஞ்சராத்திரத்தில் ஏழு பிரகாரம் வரை அனுமதி உண்டு.)
19. நான்காம் திருச்சுற்று (மர்யாதி)
20. ஐந்தாம் திருச்சுற்று (மஹா மர்யாதி)
21. துவார ஹர்மியம்
22. துவார பிரசாதம்
23. துவார கோபுரம்
ஐந்து திருச்சுற்றுகளை வெளியிலிருந்து உள்ளாக அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களாக உருவகிப்பது உண்டு. அவ்வாறே ஏழு திருச்சுற்றுகள் பூ, புவ, சுவ, மகா, ஜனா, தப, சந்திய ஆகிய ஏழு உலகங்களாக உருவகிப்பதும் உண்டு.
கோயில் வளாகத்தை யோக சக்கரங்களுடன் ஒப்பிடுவதும் உண்டு.
![]() |
| (படம்: நன்றி: திரு சிவசங்கர் பாபு) |
கோயில் விமானத்தை நின்ற அல்லது அமர்ந்த நிலை இறைவனோடு ஒப்பிடுவது மரபு. அதைப் போன்று கோயில் வளாகத்தையும் இறைவனின் கிடந்த நிலை வடிவத்தோடு ஒப்பிட்டு இறை வடிவமாக்வே கருதும் மரபு உள்ளது.
திருச்சுற்று மாளிகை
ஒரு தளம் - மாலை
இரு தளம் - மாளிகை*
இறை சன்னிதிகள்
வெவ்வேறு இறைகளுக்கான சன்னிதிகள் கோயிலின் வெவ்வேறு திருச்சுற்றுகளில் அந்தந்த கோயிலின் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.
சிவன் கோயில்களில் அம்மனுக்குத் தனி சன்னிதி 12 ஆம் நூற்றாண்டு முதல் தான் அமையத் தொடங்கியது. அதற்கு முன்னர் அம்மனின் செப்புத் திருவுருவம் அர்த்த மண்டபத்தில் போக சக்தியாய் வைக்கப்பட்டிருக்கும்.
மரபுக் கட்டடக்கலை (இரண்டாம் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
அம்பை மணிவண்ணன்; ஆகம, சிற்ப சாஸ்திரங்களில் திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்; AR பப்லிகேசன்ஸ்; 2 ஆம் பதிப்பு 2015
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
*சிவசங்கர்பாபு


No comments:
Post a Comment