Friday, 9 September 2022

தான்தோன்றி

திருமாலின் ஐந்து நிலைகள்

திருமால் ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கிறார்.

  1. பர நிலை - வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்கு காட்சி தந்தருளும் பரவாசுதேவ நிலை.
  2. வியூஹ நிலை - தேவர்களுக்கு அருள்புரியும் பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நிலை
  3. விபவ நிலை - ராமர், கண்ணன் போன்ற அவதார நிலை
  4. அந்தர்யாமி நிலை - பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களுக்குள்ளும், பொருள்களுக்குள்ளும் உள்ளுறைந்திருக்கும் நிலை
  5. அர்ச்சை நிலை - உயிர்களுக்கு  அருள்புரிய காட்சி தரும் திருமேனி நிலை.

அர்ச்சை நிலை

திருமால் பெருங்கருணையாளனாக அருள் பாலிக்கும் அர்ச்சை வடிவம் நான்கு விதங்களில் நிறுவப்படும். 

  1. மானுஷம் - அரசர் முதலிய மனிதர்களால் நிறுவப்படும் திருமால் திருமேனிகள்
  2. ஆர்ஷம் - முனிவர்களால் நிறுவப்படும் திருமால் திருமேனிகள்
  3. தைவிகம் - பிரம்மா முதலிய தெய்வங்களாலும், இந்திரன் முதலிய தேவர்களாலும் நிறுவப்படும் திருமால் திருமேனிகள்
  4. ஸ்வயம் வியக்தம்

ஸ்வயம் வியக்தம்

சைவத்தில் தானாகவே வெளிப்பட்ட லிங்கங்களை 'சுயம்பு' லிங்கங்கள் என்று அழைப்பார்கள். அவ்வாறு வைணவத்தில் தானாகவே தோன்றிய திருமாலின் திருவுருவங்களை 'ஸ்வயம் வியக்தம்' என்பர். அவ்வாறு தொன்றிய இடங்களை 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்' எனப்படும். அத்தகைய ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள் எட்டு:

  1. திருவேங்கடம்
  2. திருவரங்கம்
  3. ஸ்ரீமுஷ்ணம்
  4. நாங்குநேரி
  5. புஷ்கரம் (றாஜஸ்தான்)
  6. நைமிசாரண்யம் (உத்திர பிரதேசம்)
  7. பத்ரிநாத் (உத்திராகண்ட்)
  8. முக்திநாத் (நேபாளம்)
துணை

No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...