பிரதிவரி கீழிருந்து மேலாக ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம் என்ற நான்கு உறுப்புகள் சேர்ந்து அமைந்ததாகும்.
பிரதிவரியின் மேல் பொதுவாக வியாழங்கள் (யாளிகள்) வரிசையாக பிரதிவரியை மறைத்தவாறு அமைந்திருக்கும். இது 'வியாழ வரி' (யாளிவரி) என்றும் அழைக்கப்படுகிறது. வியாழங்களுக்குப் பதிலாக யானை, சிம்மம் முதலிய மிருகங்களும் அமையலாம்.
![]() |
| பிரதிபந்த அதிஷ்டானம் - ஆவூர் சிவன் கோயில் (ஜகதியின் பகுதியும் உபானமும் புதைந்துள்ளன) |
| பிரதி வரி - கூழமந்தல் (பொ.ஆ. 11 ஆம் நூற்றாண்டு) |
பிரதி வரியின் திருப்பங்களில் இரு பக்க வரிகள் வெளி நீண்டு அவற்றின் முகப்புகளில் ஒரு மகரம் வாயைத் திறந்து கொண்டிருக்க அதன் வாயில் வீரர்கள் படுவர். இவ்வமைப்பு மகர துண்டம் எனப்படும். இது மரத்தால் கோயில்கள் கட்டப்பட்டபோது இரு பக்கச் சட்டங்களை இணைக்கப் பயன்படுத்திய அமைப்பின் எச்சம் ஆகும்.
திருவெண்காடு - மகர துண்டத்தில் சிவன் (தென் கொங்கு சதாசிவம்)
பிரதி வரி அமையும் இடங்கள்
பிரதிவரி கீழ்கண்ட பகுதிகளில் அமையும்.
- உபபீடம்
- அதிஷ்டானம் - பிரதிவரியை உடைய அதிஷ்டானம் பிரதிபந்த அதிஷ்டானம் என்று வகைபடுத்தப்படுகிறது
- பிரஸ்தரம் - பிரஸ்தரத்தின் மேல் உறுப்பாக அமையும் பிரதிவரி 'பூமிதேசம்' எனப்படும்.
பிரதிவரியின் வகைகள்
| பிரதி வரி பல்லவர் ராஜசிம்மன் காலம் முன் நோக்கிய அமர்ந்த நிலை; இடைவெளி மாமல்லபுரம் |
தர்மராஜர் ரதத்தில் பிரதிவரி அமராவதியின் தாக்கத்தில் அமைந்தது. மேற்கண்ட பல்லவர் பாணி ராஜசிம்மன் காலத்தில் தரப்படுத்தப்பட்டது. பல்லவர் கால நடராஜர் படிமங்களில் முயலகன் வடிவமும் இவ்வாறே முன்னோக்கி அமைந்துள்ளது.
| பிரதிவரி - சோழர் பக்கத் தோற்றம்; இடைவெளி இல்லை; கால்கள் உடலோடு ஒடுங்கி |
| பாண்டியர் பிரதிவரி கால்களில் நின்ற நிலையில் முழு உருவம் |
| பாண்டியர் பூமி தேசத்தில் பிரதிவரி கால்களில் நின்ற நிலையில் முழு உருவம் |
| பூமி தேசத்தில் பிரதிவரி நாயக்கர் காலம் கால்களில் நின்ற நிலையில் முழு உருவம் |
| பாண்டியர் - பிரதிவரியில் பற்கள் |
பிரதிவரியில் பற்கள் தமிழகத்தின் மேற்கிலும் (கொங்கு, மேற்கு பாண்டிய நாடு), கேரளம், கர்நாடகத்திலுமே காணக் கிடைக்கிறது. கேரளத்தில் சமீப காலத்தில்தான் (18 ஆம் நூற்றாண்டு முதல்) பயன்படுத்தப்படுகிறது.
பாண்டியர் பிரதிவரியின் முகங்கள், அவை பற்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும் - செவ்வகமாக காணப்படுகின்றன. பல்லவ, சோழ பிரதிவரி முகங்கள் சதுரமாக உள்ளன.
கேரளாவில் பிரதிவரியின் ஆலிங்கம், அந்தரி, பிரதி , வாஜனம் ஆகிய உறுப்புகளை கலா, கம்பம், கலா, படி என்று அழைப்பர்.
| கேரள பிரதிவரி - பற்கள் |
| பிரதிவரியில் பாண்டியர் பாணி பல்லும், சோழர் பாணி வியாழமும் முத்தரையர் - செந்தலை |
| பிரதி வரி - அமர்ந்த நிலை ஆனால் இடைவெளி விட்டு கங்கர் பாணி |
| திருபுவனை |
திருபுவனை பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதியில் பல்லவர் பாணி குந்திய சிம்மங்கள் உள்ளன. யானை முதலிய மற்ற விலங்குகள் முழுவதாக நின்ற நிலையில் பாண்டியர் பாணியில் உள்ளன. ஆனால், இடைவெளியும் உள்ளது. இது விஜயநகர நாயக்கர் காலத்தில் (14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு) புனரமைக்கப்பட்டபோது அமைக்கப்பட்ட்ட நாயக்கர் பாணி பிரதி.
துணை
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;


No comments:
Post a Comment