கோபுரங்கள் என்பன முதல் இரு திருச்சுற்றுகளைத்த் தவிர மற்ற திருச்சுற்றுகளில் அமையும் நுழைவாயில் கட்டடங்களாகும்.
கோபுரங்களை அமைப்பது தமிழத்தைச் சார்ந்த மரபு ஆகும். பிற்காலத்தில் ஹொய்சாளர், விஜயநகர ஆட்சி காலத்தில் தமிழகமும் கர்நாடகமும் இவர்களது ஆட்சியின் கீழ் இருந்தபோது கோபுரங்களை அமைக்கும் பழக்கம் கர்நாடகாவிற்கும் பரவியது.
அமைப்பு
கோபுரங்கள் விமானங்களைப் போல அதிஷ்டானம், பித்தி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு அங்க அமைப்பை உடையவை. சாலாகார நாகர (செவ்வக) வகை விமானம் போன்றது. கருவறைக்கு பதிலாக இருபுறம் திறந்த நுழைவாயிலை உடையதாக உள்ளது.
கோபுரம் சுதைச் சிற்பங்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம் அல்லது சுதைச் சிற்பங்களால் நிறைந்தும் இருக்கலாம்,
பக்க வடிவம் நேர்க்கோடாக இருக்கலாம் அல்லது வளைகோடாக இருக்கலாம்.
![]() |
| நேர்கோட்டுப் பக்கங்களைக் கொண்ட, சுதைச் சிற்பங்கள் அற்ற திருவரங்கம் தெற்கு கோபுரம் ஆசியாவில் இரண்டாவது மிக உயரமானது (2016 ஆம் ஆண்டில்) 236 அடி (73 மீட்டர்) உயரம் |
![]() |
| வளைந்த பக்கங்களை உடைய, சுதைச் சிற்பங்கள் நிறைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் |
வகைகள்
காஸ்யபம் 5 வகை கோபுரங்களை விவரிக்கிறது.
- துவார சோபை - முதல் திருச்சுற்றில்; 1 - 3 தலம்
- துவார சாலை - இரண்டாம் திருச்சுற்றில்; 2 - 4 தலம்
- துவார பிராசாதம் - மூன்றாம் திருச்சுற்றில்; 3 - 5 தலம்
- துவார ஹர்மியம் - நான்காம் திருச்சுற்றில்; 4 - 6 தலம்
- துவார கோபுரம்- ஐந்தாம் திருச்சுற்றில்; 5 - 7 தலம்
மயமதம் மேற்கண்ட ஐந்து வகைகளிலும் வெவ்வேறு கோபுர பேதங்களை தெரிவிக்கிறது.
ஐந்திர மதம் என்னும் நூல் ஒரு தலம் முதல் 16 தலம் வரையான கோபுரங்களை அமைக்கும் முறையைக் குறிப்பிடுகிறது. மயமதம், மானசாரம் ஆகிய நூல்களும் வெவ்வேறு வகை கோபுரங்களின் அளவுகளைத் தெரிவிக்கிறது.
வளர்ச்சி
காஞ்சி கைலாசநாதர் கோயில் கோபுரம் - முதல் கோபுரம்
தஞ்சை பெரிய கோயில் - இரு கோபுரங்கள்
திருபுவனம் கம்பஹரேசுவரர் - விமானமும் கோபுரமும் சம உயரம்
பிற்கால கோபுரங்கள் விமானத்தை விட உயரமாக அமைந்தன.
கூடுதல் தகவல்கள்
நன்றிக்கடன்
மரபுக் கட்டடக்கலை (இரண்டாம் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
அம்பை மணிவண்ணன்; ஆகம, சிற்ப சாஸ்திரங்களில் திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்; AR பப்லிகேசன்ஸ்; 2 ஆம் பதிப்பு 2015
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
_.jpg)
_result.jpg)
No comments:
Post a Comment